உள்ளூர் செய்திகள்

வளம்பகுடியில் 14-ந்தேதி நடக்க இருந்த சாலை மறியல் ரத்து

Published On 2023-03-12 15:52 IST   |   Update On 2023-03-12 15:52:00 IST
  • பூதலூர் அருகே உளள வளம்பகுடியில் 14-ந்தேதி நடக்க இருந்த சாலை மறியல் ரத்து செய்யப்பட்டது.
  • உசிலம்பட்டி சிமென்ட் சாலை வரும் நிதியாண்டில் செய்து தரப்படும்.

பூதலூர்:

பூதலூர் தாலூகா செங்கிப்பட்டி சரகம், மனையேறிப்பட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 14ம்தேதி தஞ்சை-திருச்சி சாலை வளம்பகுடியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு அமைதி பேச்சுவார்த்தை பூதலூர் தாலூகா அலுவலகத்தில் பூதலூர் தாசில்தார் பெர்ஷியா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வருவாய் துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சி துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்து துறை, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன்,

மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்செல்லி, பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கர் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

உசிலம்பட்டி கிராமத்தில் மூடப்பட்ட தொடக்கப்பள்ளியை பள்ளியை திறப்பது தொடர்பாக எதிர்வரும் 15.03.23 பதிலலிக்கப்படும்.

துருசுப்பட்டி செல்லும் கட்டனை கால்வாய் சாலையை அமைத்துதருவது தொடர்பாக நெடுஞ்சாலை துறைக்கு முன்மொழிவுகள் அனுப்பபட்டுள்ளது.

நியாய விலை அங்காடி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அமைத்துத்தரப்படும். தற்போது இயங்கி வரும் ஏ26 எண் கொண்ட பேருந்தை கிள்ளுக்கோட்டை வரை இயக்கிட வழி செய்யப்படும்.

உசிலம்பட்டி சிமென்ட் சாலை வரும் நிதியாண்டில் செய்து தரப்படும்.உசிலம்பட்டி-துருசுப்பட்டி கிராமங்களுக்கு தற்போது நான்கு இணைப்பாக இருப்பதை ஒரு இணைப்பாக மாற்றி உசிலம்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் வர வழிவகை செய்யவழிசெய்யப்படும். வளம்பகுடியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

உசிலம்பட்டி கிராம பள்ளி மாணவர்கள் இழப்பீடு குறித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.என்று தெரிவித்ததை ஏற்று வரும் 14-ந்தேதி நடந்த இருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

Tags:    

Similar News