மேட்டூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி.
மேட்டூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
- மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட குள்ளவீரன்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
- அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், கொளத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட குள்ளவீரன்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், கொளத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மறியல் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் மற்றும் நகராட்சி பொறியாளர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், அந்த வழியாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.