உள்ளூர் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை படத்தில் காணலாம்.

தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

Published On 2023-04-27 15:41 IST   |   Update On 2023-04-27 15:41:00 IST
  • தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள மீன் கடைகள் அருகே லாரிகளை நிறுத்தி விடுகின்றனர்.
  • அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கிருஷ்ணகிரி- தருமபுரி தேசிய நெடுஞ்சாலை திம்மாபுரம் செல்வதற்கு பிரிவு சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக த்தான் திம்மாபுரம், மணிநகர், சுப்பிரமணியபுரம் மற்றும் காவேரிப்பட்டணம் நகருக்கு செல்ல முடியும்.

ஆனால் இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள மீன் கடைகள் அருகே லாரிகளை நிறுத்தி விடுகின்றனர்.

இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் நிறுத்தப்பட்ட லாரிகள் மீண்டும் புறப்படும் போது வேகமாக திருப்புவதால் பிரிவு சாலைக்கு செல்ல முயலும் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகுவது சம்பவம் அதிகரித்து வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதியில் நிரந்தரமாக பேரிகார்டு வைக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தவாறு நிறுத்தும் லாரிகளை சாலையில் நிறுத்துவதை தடுக்க வேண்டும். இதை ரோந்து காவல்துறை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News