முன்னெச்சரிகை நடவடிக்கை பணிகள் ஆய்வு.
தடுப்பு சுவர் சீரமைப்பு பணி; அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உணவுகள் வருவாய்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
- அளக்குடி பகுதியில் தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார்.
சீர்காழி:
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்று பழையாறு கடலில் கலந்து வருகிறது.
இந்த வெள்ளத்தால் திட்டு கிராமங்களான வெள்ளை மணல், நாதல்படுகை, முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களை முழுமையாக தண்ணீர் சூழ்ந்து கிராமத்தின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பலர் தங்கள் கால்நடைகள் மற்றும் உடமைகளுடன் கரைப்பகுதியில் தங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உணவுகள் வருவாய்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடைய கொள்ளிடம் ஆறு அளக்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வீட்டு வசதி நகர் வளர்ச்சி அரசு முதன்மை செயலர் கித்தேஸ்குமார் மக்வானா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காட்டூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்று நீர் கரையை அரித்து உள்ளே புகும் அபாய நிலை உள்ளதை நேரில் பார்வையிட்ட கித்தேஷ்குமார் அப்பகு தியில் கருங்கல் கொட்டி கரையை பலப்படுத்திட கூறினார். தொடர்ந்து அளக்குடி பகுதியில் தடுப்பு சுவரில் ஏற்பட்ட பள்ளங்களை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கப்படும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் முகாமில் தங்கி உள்ள மக்களை சந்தித்து உணவுகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்கப்படுகிறதாஎன அரசு முதன்மை செயலாளர் கேட்டறிந்தார். ஆய்வின் போது மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் உடன் இருந்தனர்.