உள்ளூர் செய்திகள்

பூசாரிகள் பேரமைப்பு ஒன்றிய கூட்டம் நடந்தது.

பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-06-23 09:34 GMT   |   Update On 2022-06-23 09:34 GMT
  • வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் கோவிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
  • ஓய்வூதியம் பெறும் பூசாரி மறைவுக்குப்பின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பின்னையடி மாரியம்மன் கோவிலில் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியம் பூசாரிகள் பேரமைப்பு ஒன்றிய கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஒன்றிய பொருளாளர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட பூசாரிகள் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.

ஒன்றிய துணைத்தலைவர் சிங்காரவேல், நகர தலைவர் ரத்தினம், நகரச் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் செய்தி தொடர்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழகத்தில் மதுவை முற்றிலும் ஒழிக்க பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் கோவிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரி மறைவுக்குப்பின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் ரூ.10,000 வழங்கிட வேண்டும். வருகிற 3-ம் தேதி வேலூரில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு நமது பகுதியில் இருந்து அதிக நபர்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News