உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை படத்தில் காணலாம்.

ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்

Published On 2022-07-07 10:06 GMT   |   Update On 2022-07-07 10:06 GMT
  • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தினர்.
  • தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தபடி மறு நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

சேலம்:

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் நல சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீரத்னா தலைமை தாங்கினார்.

இதில் தமிழக அரசு அறிவித்துள்ள தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அந்த பணியிடத்தில் நிரந்தரமாக நியமிக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தபடி மறு நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.

Tags:    

Similar News