உள்ளூர் செய்திகள்

சேலம் பழைய பஸ் நிலைய மறுசீரமைப்பு பணிகளை கலெக்டர், கமிசனர் ஆய்வு

Published On 2023-03-16 15:12 IST   |   Update On 2023-03-16 15:12:00 IST
  • சேலம் பழைய பேருந்து நிலையத்தை மறு சீரமைக்கும் பணி ரூ,96.53 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
  • இப்பணியினை கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிசனர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

சேலம்:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் பழைய பேருந்து நிலையத்தை மறு சீரமைக்கும் பணி ரூ,96.53 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணியினை கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிசனர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது தரை மட்டத்தளம், தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மேற்கூரைத் தளம் ஆகியவற்றின் மொத்த பரப்பளவு எவ்வளவு தினமும் வந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை, இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறித்தும் வணிக உபயோகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பரப்பளவு குறித்தும் கேட்டறிந்தனர்.

பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி, கடைகளின் எண்ணிக்கை, வணிக உபயோகம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், வளாகத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்தூக்கிகள் வசதி, நேரம் காப்பாளர் அறை, காவாலர் அறை, போன்ற பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

திருமணி முத்தாற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலத்தின் நீளம், அதற்காக எத்தனை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. என்பது குறித்தும் பேருந்துகள் மேலே செல்லுவதற்கும், கீழே வருவதற்கும் பாலத்தின் அகலம் போதுமானதாக உள்ளதா என்பதையும், பாலத்தின் இருபுறமும் கைப்பிடி சுவர் அமைத்து பேருந்துகள் பாதுகாப்பாக சென்றுவரவும் , அடுக்குமாடி பேருந்து நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி பாலத்தில் செல்லுவதற்கு போதுமான நடைபாதை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது மாநகர பொறியாளர் ஜி.ரவி செயற்பொறியாளர் செந்தில் குமார் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News