போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர்.
சர்ச்சைக்குரிய பேனர் அகற்றம்: வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இன்று மாலை காளியம்மன் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- இந்து முன்னணி அமைப்பினர் சர்ச்சைக்குரிய பேனர் வைக்ககூடாது என தெரிவித்து போலீ சாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டுவில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து இன்று மாலை காளியம்மன் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நகரின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டி ருந்தன.
அதில் ராமர், சீதை படத்தை அவமதிப்பு செய்தும், மோடி, அமித்ஷா படங்களை இடம்பெற செய்தும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் எழுதப்பட்டி ருந்தன. இதனால் இந்து முன்னணி அமைப்பினர் அந்த பேனர்களை அகற்றக்கோரி வத்தல க்குண்டு போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீ சார் அந்த பேனர்களை அகற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மனித நேய மக்கள் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் நாங்கள் வைத்த பேனரை எங்களிடம் அனுமதி பெறாமல் எவ்வாறு அகற்ற லாம் எனக்கூறி போலீ சாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் அதேஇடத்தில் பேனரை வைக்காவிட்டால் சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். ஆனால் இந்து முன்னணி அமைப்பி னர் பேனர் வைக்ககூடாது என தெரிவித்து போலீ சாரிடம் வாக்குவாதம் செய்தனர். இச்சம்பவத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் வத்தலக்குண்டுவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.