உள்ளூர் செய்திகள்

ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடந்த போது எடுத்த படம்.

திருச்செந்தூர் அரசு பள்ளியில் மர்மமாக இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Published On 2023-01-04 14:39 IST   |   Update On 2023-01-04 14:39:00 IST
  • அஜய்குமார் அங்குள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
  • ஆர்.டி.ஓ. புகாரி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே தோப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மனைவி. செல்வக்குமார். இவர்களது மகன் அஜய்குமார் (வயது 10).

அஜய்குமார் அங்குள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், அந்த பள்ளியில் கழிப்பிட பராமரிப்பு பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் அஜய்குமார் உள்பட 5 சிறுவர்கள் விளையாடி உள்ளனர்.

அப்போது அஜய்குமார் திடீரென கீழே விழுந்தான். அவனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அஜய்குமார் பரிதாபமாக இறந்தான்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை நாளில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்த தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவனின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி தலைமையில் மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் இன்று காலை 2-வது கட்டமாக மீண்டும் பேச்சுவார்த்தை கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது.

Tags:    

Similar News