உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட இடத்தில் அறநிலையத்துறை அதிகாரிகளால் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு

Published On 2022-11-22 15:45 IST   |   Update On 2022-11-22 15:45:00 IST
  • 3 கோவில்களில் 8 ஏக்கர் 84 செண்ட் நிலம் மீட்கப்பட்டது.
  • ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலின், குழுக் கோவிலான பழைய பேரா–வூரணி பிரசன்ன வெங்கடேச–பெருமாள், செங்கமங்கலம் தெய்வாங்கப் பெருமாள், மார்க்கண்டேஸ்வரர் ஆகிய மூன்று கோவில்களுக்கும் சொந்த மான ஆக்கிரமிப்பு நிலம் மீட்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தஞ்சாவூர் இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் நாகையா, இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் சங்கர், நில அளவையர் ரெங்கராஜன், பேராவூரணி சரக ஆய்வாளர் அமுதா ஆகியோர் முன்னி–லையில், நீலகண்ட பிள்ளையார் கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆக்கிரமிப்பு தாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் தீர்வு காணப்பட்டு, ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து கோயில் நிலம் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் கொண்டு வரப்பட்டு, அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.

மொத்தம் 3 கோவில்களில் 8 ஏக்கர் 84 செண்ட் நிலம் மீட்கப்பட்டது. அதாவது ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். ஆக்கிர–மிப்பு மீட்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News