உள்ளூர் செய்திகள்

கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான நஞ்சை நிலத்தை அதிகாரிகள் மீட்டு அறிவிப்பு பலகையை நட்டியதை படத்தில் காணலாம்.


தென்திருப்பேரையில் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலம் மீட்பு

Published On 2023-02-08 07:03 GMT   |   Update On 2023-02-08 07:03 GMT
  • நிலத்தை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று பக்தர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • மீட்கப்பட்ட நிலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகையும் நடப்பட்டது.

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தென் திருப்பேரையிலுள்ள நவ கைலாயத்தில் 7-வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 1.25 ஏக்கர் நஞ்சை நிலம் குருகாட்டூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.

அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை வேண்டும் என்று பக்தர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அந்த நிலத்தை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில், அறநிலையத்துறை தனி தாசில்தார் ஈஸ்வர நாதன், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் செயல் அலுவலர் அஜீத் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டு நிலத்தை மீட்டனர்.

அந்த நிலத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகையும் நடப்பட்டது.

Tags:    

Similar News