சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
- 100 நாள் திட்ட பணியாளர்கள் இருதரப்பினரிடையே மோதல்
- போலீசார் பேச்சுவார்த்தை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெண்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் திட்ட பணியாளர்கள் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு 100 நாள் திட்ட பணியாளர் தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரு தரப்பினற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நெமிலி- அரக்கோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் நெமிலி சேந்தமங்கலம் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெமிலி போலீஸ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.