உள்ளூர் செய்திகள்
தீ விபத்தில் விசைத்தறி எந்திரங்கள் எரிந்து நாசம்
- ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகியது
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டை பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 55). இவர் வீட்டின் அருகே சொந் தமாக விசைத்தறி எந்திரங்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக விசைத்தறி எந்திரங்கள் தீப்பற்றி எரிவதாக அரக்கோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான விசைத்தறி எந்திரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.