உள்ளூர் செய்திகள்

காயங்களுடன் மீட்கப்பட்ட மான் சாவு

Published On 2023-03-14 14:26 IST   |   Update On 2023-03-14 14:26:00 IST
  • சிகிச்சை பலனின்றி பரிதாபம்
  • அதிகாரிகள் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் ஜெய் பீம் நகரில் நேற்று அதி காலை ஒரு ஆண் புள்ளி மான் ரத்த காயத்துடன் வந்தது. இதைக்கண்ட அப்பகுதிமக்கள் மானை மீட்டு அங்குள்ள கோயில் அருகே கட்டினர்.

இதுகு றித்து அரக்கோணம் வரு வாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், டவுன் விஏஓ கலைவாணன் அங்கு வந்து ஆற்காடு வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதைய டுத்து, அரக்கோணம் வன காப்பாளர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து கால்நடை டாக்டர்கள் உதவியுடன் மானுக்கு சிகிச்சை அளித்தார். ஆனால், மான் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி இறந்தது. இதைத்தொடர்ந்து, அரக் கோணம் கணேஷ் நகரில் உள்ள கால்நடை மருத் துவமனையில் இறந்த மானுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. வனத் துறையினர் முன்னிலையில் மானை அங்கேயே தீயிட்டு கொளுத்தினர்.

நாய்கள் கடித்து காயம் மானுக்கு ஏற்பட்டதா? அல்லது தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடி பட்டதா? இரும்பு கம்பி யில் குத்தி கொண்டதா? என அதிகாரிகள் விசாரிக் கின்றனர்.

Tags:    

Similar News