உள்ளூர் செய்திகள்

எந்திர பறவைகளின் சரணாலய பொருட்காட்சி

Published On 2023-03-10 15:29 IST   |   Update On 2023-03-10 15:29:00 IST
  • வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது
  • மக்கள் குடும்பத்துடன் வந்து கண்டு களித்து வருகின்றனர்

ராணிப்பேட்டை:

அரக்கோணம் இரட்டைக்கண் பாலம் அம்பேத்கர் ஆர்ச் எதிரில் எந்திர பறவைகளின் சரணாலய பொருட்காட்சி கடந்த 17-ந் தேதி தொடங்கப்பட்டது.

இக்கண்காட்சியை தினமும் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு களித்து வருகின்றனர்.

இக்கண்காட்சியில் திகிலூட்டும் பேய் வீடு, சிறுவர்களின் விளையாட்டு உலகம், 3டி ஷோ, ராட்டினம், ஜுவல்லர்ஸ், விதவிதமான உணவு பண்டங்கள் அரங்கம் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தினமும் மாலை 5 மணிக்கு பொருட்காட்சி தொடங்கு கிறது. வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இக்கண் காட்சி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News