சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.
வீடுகளில் மழைநீர் புகுந்ததால் சாலை மறியல்
- ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
- நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதி
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சி செந்தில் நகரில் இரவு முழுவதும் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
மேலும் அப்ப குதியை மழைநீர் முழுமையாக சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். மழைநீரை வெளியேற்ற வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கா ததால் 50-க்கும் மேற்பட்ட அரக்கோணம் திருத்தணி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், கைனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஷவரி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து மறியலை கைவிட செய்தனர்.
கைனூர் செந்தில் நகரிலிருந்து வெளியேறும் மழைநீர் கால்வாய் முலம் வடமாம்பாக்கம் ஏரிக்கு செல்ல வேண்டும். ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து பலரும் வீடுகள் கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆக்கிர மிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.