உள்ளூர் செய்திகள்

நெற்பயிர்கள் அதிக மகசூல்

Published On 2023-03-12 14:36 IST   |   Update On 2023-03-12 14:36:00 IST
  • விவசாயிகள் மகிழ்ச்சி
  • டெல்டா பகுதியை விட அதிகமான நெல் கொள்முதல் செய்தது

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் நெமிலி ரெட்டிவலம் ஆலப்பாக்கம் கன்னிகாபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி அதிகமாக செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு டெல்டா பகுதியை விட அதிகமான நெல் கொள்முதல் செய்தது வட மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்மழையின் காரணமாகவும் ஏரிகளில் நீர் உள்ளதாலும் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ளதாலும்,

இந்தபோகம் விவசாயம் செய்த விவசாயிகள் அனைவரும் நெற்ப்பயிரில் அதிக மகசூல் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News