உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க கூட்டம்

Published On 2022-12-10 14:23 IST   |   Update On 2022-12-10 14:23:00 IST
  • 9 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினர்
  • பாதுகாப்பு நிதி ஒரு லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்

வாலாஜா:

ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க ராணிப்பேட்டை மாவட்ட முதல் மாநாடு நேற்று வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் டி.வி.எத்துராஜ் தலைமை தாங்கினார். முனைவர் கலைநேசன் வரவேற்றார். அறிக்கையை குறித்து மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் பேசினார்.

கூட்டத்தில் மாநிலத்தலைவர் கோ.முரளிதரன் 75 அகவை முடிந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

கூட்டத்தில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்துதல் அகவிலைப்படி உடனடியாக வழங்க்கோரியும், 70 வயதானவர்க்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கேட்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சமாக உயர்த்தக் கோருதல், மருத்துவப்படி ரூ.1000 உயர்த்தக்கோருதல், மூத்த குடிமக்களுக்கு ெரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்க வேண்டும், நாடாளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ள ஓய்வூதிய அறிக்கையை உடனே அமுல்படுத்த வேண்டும், கம்யூடேசன் பிடித்தம் தொகையை 12 ஆண்டுகளாக குறைத்தல் பற்றி வலியுறுத்தி 9அம்ச கோரிக்கைகளை குறித்து பேசினர்.

வரதன், சுந்தரேசன், கோவிந்தசாமி, ஜெயக்குமார், தேவநேசன், மோகன், கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டனர். மேலும் இயற்கை மருத்துவத்தைப் பற்றி ஆரோக்கியத்தின் சாவி என்ற தலைப்பில் அரசு மருத்துவர் எஸ்.சசிரேகா ஆலோசனை வழங்கினார்.

மாநில இணை செயலாளர் நிலவு குப்புசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News