உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

சோளிங்கரில் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-11-22 13:25 IST   |   Update On 2022-11-22 13:25:00 IST
  • கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
  • ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சோளிங்கர்:

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கீழாண்டமோட்டூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்பாசன கால்வாயில் நகராட்சி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது.

அதிக அளவில் கொசுத்தொல்லை யும் உள்ளது. இதனால் அப்ப குதி மக்கள் காய்ச்சலில் அவதிப்படுவதாகவும் இந்த கழிவு நீர் விவசாய நிலங்களுக்குள் செல்வதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே கழிவுநீர் செல்ல முறையாக கால்வாய் அமைக் காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கீழாண்ட மோட்டூர் சாலையில் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவலறிந்த சோளிங்கர் தாசில்தார் ஆனந்தன், சோளிங்கர் பொதுப்பணித்துறை அலுவலர்சேரலா தன், போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் ராஜகோ பால், கிராம உதவியாளர்கள் சிவா, வேணு மற்றும் போலீசார் சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால் வாயை தூர்வாரி கழிவுநீர் செல்லவழிசெய்வதாக உறுதி அளித்தனர்.

அதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News