தமிழ்நாடு செய்திகள்

மகா சிவராத்திரி: எழும்பூரில் இருந்து திருவண்ணாமலை, வேலூருக்கு சிறப்பு ரெயில்

Published On 2026-02-14 11:54 IST   |   Update On 2026-02-14 11:54:00 IST
  • வருகிற 16-ந்தேதி இதே ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9.15 மணிக்கு வந்து சேரும்.
  • விழுப்புரம்- திருவண்ணாமலை இடையேயும் விழுப்புரம்- வேலூர் இடையேயும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை:

மகா சிவராத்திரி நாளை நடைபெறுவதால் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ் மற்றும் ரெயில்களில் செல்கிறார்கள். கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு பிற்பகல் 3 மணிக்கு சென்றடைகிறது.

வருகிற 16-ந்தேதி இதே ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9.15 மணிக்கு வந்து சேரும்.

இதேபோல எழும்பூரில் இருந்து வேலூர் கண்டோண்ட்மென்ட்டுக்கு முன்பதிவு இல்லாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயில் எழும்பூரில் இருந்து நாளை மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு வேலூர் சென்றடைகிறது.

பின்னர் 16-ந்தேதி வேலூர் கண்டோண்ட்மென்ட்டில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 9.15 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த 2 ரெயில்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.

இதே போல விழுப்புரம்- திருவண்ணாமலை இடையேயும் விழுப்புரம்- வேலூர் இடையேயும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

Tags:    

Similar News