தக்கோலத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்
- வருகிற 29-ந் தேதி கருத்து கேட்பு கூட்டம்
- பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்
ராணிப்பேட்டை:
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணைப்படி, வருவாய் வட்ட தலைமையிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைமையிடம் அடிப்படையில் சார் பதிவாளர் அலுவலக நிர்வாக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களை மறு சீரமைத்தல் தொடர்பாக பதிவுத்துறை தலைவருக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்ட தன்தொட ர்ச்சியாக ராணிப்பேட்டை வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள ராணிப்பேட்டை பதிவு மாவட்டத்தை சேர்ந்த ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம், வாலாஜா, ஆற்காடு, கலவை சார்பதிவாளர் அலுவலகங்களை பொறுத்து வருவாய் வட்ட தலைமையிடம் அடிப்படையில் அவற்றோடு இணைக்கப்பட வேண்டிய வருவாய் கிராமங்கள் விவரங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலக நிர்வாக எல்லைக்குட்பட்ட பதிவு கிராம எல்லைகளை மறு சீரமைத்து மாற்றி அமைப்பது குறித்தும், தற்போது இயங்கி வரும் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தினை பொறுத்து நிர்வாக நலன் கருதி அரக்கோணம் தெற்கு குறு வட்டம் மற்றும் பள்ளூர் குறுவட்டத்திற்கு கட்டுப்பட்ட பதிவு கிராமங்களை உள்ளடக்கி தக்கோலம் பேரூராட்சி இணை தலைமை இடமாகக் கொண்டு புதிய சார் பதிவாளர் அலுவலகம் தோற்றுவிப்பது குறித்தும் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.