உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு, குவாரிகளில் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை

Published On 2023-09-13 15:04 IST   |   Update On 2023-09-13 15:04:00 IST
  • அவசர உதவிக்கு 1033 என்ற எண்ணை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும்
  • கலெக்டர் வளர்மதி பேச்சு

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திறந்த வெளி கிணறுகள்,ஆழ்துளை கிணறுகள், கட்டுமான பள்ளங்கள் மற்றும் குவாரிகள் ஆகியவை கண்ணுக்கு தெரியாத வகையில் இருப்பதால் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே அவற்றால் விபத்து ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சோளிங்கர் தாலுகா, பெருங்காஞ்சியில் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும், பள்ளி கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓச்சேரி அருகில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் இணைப்பு பாதை மட்டும் சரி செய்யப்படாமல் உள்ளது.

தற்போது எந்த வேலைகளும் நடைபெறவில்லை எனினும் சுரங்கப்பாதையின் கீழ் செல்ல தடை செய்யப்பட்டு ள்ளது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளதால் பாலம் வேலை தொடங்கும் வரை பாலத்தின் கீழ் போக்குவரத்தை அனுமதிக்க வட்டார போக்குவரத்து அலுவலர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பழுதடைந்த, ஓய்வு எடுக்க நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள், உயிர் பலி ஏற்படுகிறது.

இதை தடுத்திட வாகன ங்களை நிறுத்தக்கூடாது என்ற பலகை உபயோகிக்க வேண்டும். அவசர உதவிக்கு 1033 என்ற எண்ணை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, திட்ட இயக்குநர் லோகநாயகி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News