விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
- தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக் வலியுறுத்தல்
- கோஷங்களை எழுப்பினர்
அரக்கோணம்:
அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் அரக்கோணம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அரக்கோணம் ஒன்றிய செயலாளர் சந்தர் தலைமையில் தாங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் பார்வேந்தன் சிஎஸ்ஐ சென்னை பேராய மத்திய வட்டார தலைவர் கிதியோன் தினகரன் அரக்கோணம் பேராயர் பிரேம்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கவுதம், மண்டல அமைப்பு செயலாளர் ரத்தினம் நற்குமரன் முன்னிலை வகித்தனர்.
இதில் மதம் மாறிய கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலிலிருந்து நீக்கக் கூடாது அவர்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் நகர செயலாளர் அப்பன் ராஜ் மேற்கு ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் உட்பட கிறிஸ்துவ திருச்சபை ஆயர்கள் செயலர் பொருள் ஊழியர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர்.