உள்ளூர் செய்திகள்
வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் ஆய்வு
- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரதம மந்திரி வீடு திட்டத்தில் வழங்க ஏற்பாடு
- தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்
நெமிலி:
நெமிலியை அடுத்த பனப்பாக்கம் அருகே துறையூர் கிராமத்தில் வசிக்கும் வீடற்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை நேற்றுராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது துறையூர் கிராமத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு வழங்கவுள்ள இடத்தை ஆய்வு செய்து விரைந்து பணிகளை முடித்து இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரக்கோணம் சப்- கலெக்டர் பாத்திமா, நெமிலி தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.