உள்ளூர் செய்திகள்
- அரக்கோணத்தில் 77 மி.மீ. மழை பதிவானது.
- கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த பகுதிகளில் நீண்ட நேரம் மழை பெய்ததால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக அரக்கோணத்தில் 77 மில்லி மீட்டர், சோளிங்கரில் 62 மீட்டர் மழையும் பதிவானது.
ஆற்காடு, வாலாஜா பகுதிகளிலும் கனமழை பெய்தது. நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மழைநீர் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வாலாஜா 30.3, ஆற்காடு 33, காவேரிப்பாக்கம் 47, அம்மூர் 26, கலவை 38.2,அரக்கோணம் 77, சோளிங்கர் 62.