உள்ளூர் செய்திகள்
கண்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
- பச்சை காய்கறி, கீரைகளை சாப்பிட அறிவுரை
- ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கலவை:
கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் சனாவுல்லா முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கண் சிகிச்சை நிபுணர் இளவரசன் கலந்துகொண்டு கண் பார்வை குறைபாடு, கணினியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கி, இயற்கை முறை பச்சை காய்கறிகள், கீரை, கேரட் போன்ற வற்றை அதிக அளவு சாப்பிட வேண்டும் என்றும் கூறினார் இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.