உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த எக்ஸ்பிரஸ் ெரயிலை படத்தில் காணலாம்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் சக்கரம் பழுதால் அரக்கோணத்தில் நிறுத்தம்

Published On 2023-03-03 15:17 IST   |   Update On 2023-03-03 15:17:00 IST
  • மாற்று பெட்டி இணைக்கப்பட்டு தாமதமாக சென்றது
  • பயணிகள் கடும் சிரமம்

அரக்கோணம்:

பீகார் மாநிலம் பரவுனியில் இருந்து கேரள மாநிலம் எர்ணா குளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் கிடையாது.

இந்த ரெயில் நேற்று காலை 10.45 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்குள் வந்த போது திடீரென ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியின் சக்கரங்கள் பழுது ஏற்பட்டு சுழலாமல் இருந்தது.

இதனை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தி அரக்கோணம் ரெயில்வே அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அந்த 'பெட்டிக்கு பதில் மாற்று ரெயில் பெட்டியை இணைத்தனர்.

இதனால் எக்ஸ்பி ரஸ் ரெயில் நண்பகல் 12.15 மணிக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது. ஏற்கனவே இந்த ரெயில் சில மணி நேரம் கால தாமதமாக வந்திருந்த நிலையில் மேலும் தாமதமாக புறப்பட்டதால் ரெயிலில் இருந்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.

Tags:    

Similar News