உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம்

Published On 2023-09-07 09:34 GMT   |   Update On 2023-09-07 09:34 GMT
  • நாளை தொடங்குகிறது
  • கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்டார அளவில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுகளுடன் கூடிய தேசிய அடையாள அட்டை மற்றும் அனைத்து வயது நிரம்பிய மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான தேர்வு முகாம்கள் நடைபெற உள்ளது.

நாளை 8-ந் தேதி திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வருகிற 12-ந் தேதி ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 15-ந் தேதி வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 16-ந் தேதி அரக்கோணம் ஜோதி நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 20-ந் தேதி சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 22-ந் தேதி நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 26ம் தேதி காவேரிப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,27-ந் தேதி ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் நடைபெறுகிறது.

இதில் அனைத்து வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தேவைப்படும் எனில் தங்களது அடையாள அட்டை நகல், மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை நகல், ரேசன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெற்றிருந்தால் அதன் நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் 5 ஆகியவற்றுடன் முகாம்களில் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News