டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் சாவு
- வீடு, வீடாக நிலவேம்பு கசாயம் விநியோகம்
- அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட் டம் பனப்பாக்கம் பேரூ ராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளுர் கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலியானான்.
அதன் எதிரொலியாக பனப்பாக்கம் பேரூராட்சி யில் விஷக்காய்ச்சல்க ளான டெங்கு, டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி காசிகார தெரு, பெரிய தெரு, சுப்ரமணிய கோவில் தெரு, வேளாளர்தெரு, அண்ணா நகர், அருந்ததியர் பாளையம், ஆதி திராவிடர் காலனி, தென் மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.