உள்ளூர் செய்திகள்

ரூ.18 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

Published On 2022-09-12 09:47 GMT   |   Update On 2022-09-12 09:47 GMT
  • ஒன்றிய குழு தலைவர் பார்வையிட்டார்
  • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கடம்பநல்லூரில் மக்களின் பல வருட கோரிக்கையாக இருந்த பாலம் அமைக்கும் பணியினை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து ஊராட்சி

ஒன்றிய பொது நிதி மற்றும் 15-வது நிதிக்குழு மான்யத்திலிருந்து, கடம்ப நல்லூர் கிராமத்தில் சிறுபாலம் ரூ.9 லட்சம் மற்றும் பின்னாவரம் ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலை ரூ.9 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தொடங்கி வைத்தார்.

இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிவராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரலட்சுமி, அஷோக்குமார், விநாயகம், ஒப்பந்ததாரர் பாபு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News