உள்ளூர் செய்திகள்

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-09-13 15:17 IST   |   Update On 2022-09-13 15:17:00 IST
  • 3 டன் சிக்கியது
  • ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (42) இவரது வீட்டில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் எஸ்.ஐ.முத்தீஸ்வரன் ஆகியோர் சந்திரசேகர் வீட்டில் சோதனை செய்த போது வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 75 மூட்டையில் சுமார் 3 டன் கொண்ட ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இந்த ரேஷன் அரிசிகள் திருமால்பூர் அன்வர்திகான்பேட்டை பள்ளூர் பளப்பாக்கம் ரெட்டிவலம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு சேமிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் இதில் ரேஷன் கடையில் வேலை செய்யும் விற்பனையாளர்களும் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து இந்த பகுதியில் லாரி மூலம் ரேசன் அரிசி கடத்துவது வாடிக்கையாக உள்ளதாக பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News