உள்ளூர் செய்திகள்

இடி தாக்கி கல்லூரி மாணவன் பலி

Published On 2023-03-18 14:10 IST   |   Update On 2023-03-18 14:10:00 IST
  • அமைச்சர் ஆர்.காந்தி பெற்றோருக்கு ஆறுதல்
  • மாடு ஓட்டி வந்த போது பரிதாபம்

காவேரிப்பாக்கம்:

வாலாஜா அடுத்த அனந்தலை கிராமம் கணபதி நகரை சேர்ந்தவர் முனுசாமி.ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

இவரது மகன் விக்னேஸ்வ ரன் (வயது 18) இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டினை பிடித்துக்கொண்டு வந்த போது இடி தாக்கியதில் விக்னேஷ் பேச்சு மூச்சுயின்றி மயங்கி விழுந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே விக்னேஷ் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் வைக்க ப்பட்டுள்ள விக்னேஷின் உடலுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் வளர்மதி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்து அவரின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் அமைச்சர் காந்தி ஆறுதல் கூறினார்.

இடி தாக்கி உயிரிழந்த இளைஞருக்கு தமிழ்நாடு அரசின் மூலம் உடனடியாக நிவாரண நிதி உதவி பெற்று வழங்கப்படும் அதற்கான நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் அமைச்சர் காந்தி கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News