அரக்கோணத்தில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்த காட்சி.
ரேசன் கடை, பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
- மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தல்
- வாரசந்தை கட்டிடங்களின் தரம் குறித்து சோதனை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தணிகை போளூர், உள்ளியம்பாக்கம், பள்ளியாங்குப்பம், கீழாந்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் கட்டப்படும் பள்ளி கட்டிடங்கள் தரம் குறித்தும் மற்றும் ரேசன் கடைகளில் எடை மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்து கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் உளியம்பாக்கம் பள்ளிகளில் மாணவ -மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என எச்சரித்தார். 8 பேர் உள்ள பள்ளிக்கு புதிய கட்டிடம் எதற்கு என்றும் 2 ஆசிரியர்கள் ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும் தணிகை போளூர் வாரசந்தை கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் சண்முகசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சுரேஷ் சவுந்தர்ராஜன், வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, பஞ்சாயத்து தலைவர்கள் வெங்கடேசன், ஜீவா, அருள், கிராம நிர்வாக அலுவலர் கலைவாணன், மூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.