உள்ளூர் செய்திகள்
அங்கன்வாடி மைய கட்டிட பணியை கலெக்டர் திடீர் ஆய்வு
- ரூ.19 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது
- 2 நாட்களுக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவு
ஆற்காடு:
ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் நந்தியாலம் ஊராட்சியில் ஆதி திராவிடர் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தில் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது 2 நாட்களுக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
திட்ட இயக்குனர் லோகநாயகி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிரிஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் ராஜேஷ், ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் உள்பட பலர் உடன் இருந்தனர்.