உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-04-14 14:50 IST   |   Update On 2023-04-14 14:50:00 IST
  • அத்தியாவசிய மருந்துகள் குறித்து சோதனை
  • உள்நோயாளிகள் பிரிவு கட்டிடம் இடிப்பது குறித்து ஆலோசனை

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனை யில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார். அப்போது நோயா ளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் நாள் தோறும்சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அத்தியாவசிய மருந் துகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பழுதடைந்துள்ள உள்நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை இடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் கட்டிடத்தை இடிக் கும்போது நகராட்சியில் உள்ள ஒருகட்டிடத்தை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றும் படி கேட்டுக்கொண்டார்.

சோளிங்கர் அருகே உள்ள மோட்டூரை சேர்ந்த லோகநாயகி என்பவர் தனது மகன் சச்சின் (வயது 9) தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் கலெக்டர் வளர்மதியிடம் கண்ணீர்மல்க கூறினார்.

அதற்கு கலெக்டர் திங்கட்கிழமை நடக்கும் குறை தீர்வு கூட்டத்திற்கு வந்து அட்டை பெற்றுக்கொள்ளும்படியும், இல்லம் தேடி மருத்துவம் மூலம் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படியும் கூறினார்.

Tags:    

Similar News