உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் மோதல்

Published On 2023-08-03 14:38 IST   |   Update On 2023-08-03 14:38:00 IST
  • 4 பேர் மீது வழக்கு பதிவு
  • போலீசார் தேடி வருகின்றனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம்,ஸ்ரீ ராம் நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கூழ் வாரத்தல் திருவிழாவும், இரவில் நாடகமும் நடைபெற்றது.

அப்போது அப்பகுதியில் சுகுமார் என்பவரின் வீட்டின் அருகே சில வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர் .

இதை சுகுமார் மற்றும் அவரது தாய் அமுதா, அதே பகுதியை சேர்ந்த பாண்டியன், பாலாஜி ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து அந்த வாலிபர்கள் சுகுமார் உள்பட 4 பேரையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த 4 பேரும் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இது தொடர்பாக சுகுமார் சிப்காட் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சீக்கராஜபுரம் மோட்டூரை சேர்ந்த விஜி(எ) கருணாகரன், மோகன்குமார், சதீஷ்குமார், பிரபாகரன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News