திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை வழங்கும் முகாம்
- நாளை முதல் தொடக்கம்
- கலெக்டர் அறிவிப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் திருநங்கைகள் மற்றும் திருநம்பி களுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை வழங்கும் முகாம் நாளை 28ந் தேதி (திங்கட்கி ழமை) முதல் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை காலை 10 மணி முதல் 1 மணி வரை கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது. 28ந்தேதி அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 29ந் தேதி நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகம், 30ம் தேதி காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம், டிசம்பர் மாதம் 1ந் தேதி சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகம், 2ந் தேதி வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம், 3ந் தேதி திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறும். எனவே, அனைத்து திருநங்கைகளும், திருநம்பிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.