வாலாஜாவில் பாஜகவினர் பால் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.
வாலாஜாவில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
- பால் விலை உயர்வை கண்டித்து நடத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகர பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து வாலாஜா பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் காந்தி தலைமை தாங்கி னார்.ஆர்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், பால் விலை உயர்வு,மின்சார கண்டன உயர்வு,சொத்து வரி உயர்வு கண்டித்தும் விலை உயர்வுகளை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் சதீஷ், மாவட்ட செயலாளர் ஹேமாவதி, ஆன்மீக பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் நாகப்பன், அரசு தொடர்பு பிரிவு நிர்வாகி சஞ்ஜெய் லோகேஷ்,நகரமன்ற உறுப்பினர் சீனிவாசன், நகர பொது செயலாளர் சரவணன், நகர பொருளாளர் சுரேஷ் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்ட த்தில் கலந்து கொண்டனர்.