உள்ளூர் செய்திகள்

ஏரிகளில் மண் எடுப்பது குறித்து உதவி கலெக்டர் ஆய்வு

Published On 2023-04-18 14:55 IST   |   Update On 2023-04-18 14:55:00 IST
  • மண் எடுக்க அனுமதி கோரப்பட்ட நிலையில் நடவடிக்கை
  • விரைவு சாலை பணி நடைபெற்று வருகிறது

நெமிலி:

நெமிலி அருகே சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக அருகில் உள்ள ஏரிகளில் இருந்து மண் எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கர்ணாவூர், பெருவளையம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள சரப் பந்தாங்கல் ஏரி, கர்ணாவூர் ஏரி, ஜம்பேரி, ஆலந்தாங்கல் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து மண் எடுக்க அனுமதி கோரப்பட்டது.

இதைதொடர்ந்து நேற்று சென்னை - பெங்களூரு விரைவு சாலை அமைக்கும் பணிக்காக ஏரியிலிருந்து மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியது தொடர்பாக உதவி கலெக்டர் பாத்திமா நேரடி ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News