உள்ளூர் செய்திகள்
ஏலகிரி மலையில் அரக்கோணம் விமான படை பயிற்சி முகாம்
- 10 நாட்களாக தங்கி பயிற்சி பெற்றனர்
- விமான படை பயிற்சி
ஜோலார்பேட்டை:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் உள்ள கோடை விழா மைதானத்தில் நேற்று அரக்கோணம் விமானப்படை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
இதில் அரக்கோணம் விமான படை பயிற்சி மாணவர்கள் 35 பேர் மற்றும் விமான படையினர் 15 பேர் என மொத்தம் 50 பேர் ஏலகிரி மலையில் கடந்த 10 நாட்களாக தங்கி பயிற்சி பெற்றனர்.
இந்த முகாமில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 50 மரக்கன்றுகளை பயிற்சி மாணவர்கள் நட்டனர்.
இந்நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி சனவாஸ்ாபாபு, ்ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் மற்றும் ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மயில்வாகனன் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.