உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
- ஒரு வழி பாதையால் பயணிகள் கடும் அவதி
- பயணிகள் வலியுறுத்தல்
அரக்கோணம்:
தென்னக ரெயில்வே நிலையங்களில் அரக்கோணம் ரெயில் நிலையம் மிக முக்கியமானது.
இந்த ரெயில் நிலையத்தில் 7 நடைமேடைகளை உள்ளது.
ரெயில் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கான 2 மேம்பாலங்கள் உள்ளன.
2 முதல் 5-வது நடை மேடைகளுக்கு செல்ல இரு வழி நடைமேடை மேம்பாலம் உள்ளது.
இதில் ஒரு வழி பாதை பழுந்தடைந்துள்ளதால் அந்த பாதையை தற்போது மூடி உள்ளனர். ஒரு வழி பாதையே பயணிகள் பயன்படுத்தி வருவதால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நீண்ட நாட்கள் மூடி கிடந்த நிலையில் அதற்கான பணி நேற்று இரவு தொடங்கப்பட்டது. பயணிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகத்திற்கும், கல்லூரிக்கும் சென்று வருவதால் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.