கபடி போட்டி நடைபெற்ற போது எடுத்த படம்.
கபடிபோட்டியில் அசத்திய பெண் வீராங்கனைகள்
- பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தாா்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை பாணாவரம் பகுதியில் நடைப்பெற்றது. மாவட்ட அமெச்சூா் கபடி கழகமும், பாணாவரம் திமுகவும் இணைந்து பாணாவரம் திடீர் நகர் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் மைதானத்தில் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட அமெச்சூா் கபடி கழக தலைவர் வேலு தலைமையில் நடைப்பெற்ற இந்த போட்டிக்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக துணைசெயலாளரும், மாவட்ட அமெச்சூா் கபடி கழக துணைதலைவருமான துரைமஸ்தான் முன்னிலை வகித்தார். பொருளாளா் சுசீந்திரன் அனைவரையும் வரவேற்றாா். பாணாவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் இந்தபோட்டியை தொடங்கி வைத்தாா்.
இந்த கபடி போட்டியில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சுமாா் 44 மாணவிகள் கலந்து கொண்டனா். இவர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு, இரண்டு குழுக்களுக்கிடையே போட்டி நடைப்பெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய 12 பெண்கள் சீனியா் கபடி பிரிவிற்க்கு தேர்வு செய்யப்பட்டனா். இவா்கள் வருகிற 9-ந் தேதி முதல் 12-ந்தேதி வரை விழுப்புரத்தில் மாநில அளவில் நடைப்பெற உள்ள கபடி போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் கலந்து கொள்ள உள்ளனா்.
இதில் பாணாவரம் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்ஜீனன், துணைதலைவர் சரண்யா, காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் ரவி, செந்தாமரை, தேவராஜ், பாஸ்கா், ரவி, சுற்றுசூழல் அணி அமைப்பாளா் வெங்கடேசன், நெமிலி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளா் ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளா் பெருமாள், துணைசெயலாளா் வெங்கடேசன், மாவட்ட அமெச்சூா் கபடி கழக பயிற்ச்சியாளா்கள், பாணாவரம் திமுக கிளை செயலாளா் பாலன், பாணாவரம் ஊராட்சிமன்ற உருப்பினா்கள், உட்பட இப்பகுதியை சோ்ந்த இளைஞா்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.