பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி
- நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த மருதாலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (39), செந்தில் (38) இவர்கள் 3 பேரும் நேற்று அக்ராவரம் பகுதியில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பொன்னை ராணிப்பேட்டை சாலையில் எதிரே மண் ஏற்றி வந்த லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் ஏழுமலை வழியிலியே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.