உள்ளூர் செய்திகள்

தீப்பிடித்து எரிந்த கரும்பு வெட்டும் எந்திரம்.

மின் ஒயர் உரசியதில் கரும்பு வெட்டும் எந்திரம் எரிந்து நாசம்

Published On 2023-04-13 14:42 IST   |   Update On 2023-04-13 14:42:00 IST
  • ஒரு ஏக்கர் கரும்பும் தீயில் கருகியது
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த சித்தேரி வட களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57). இவர் தனது விவசாய நிலத்தில் சுமார் 10 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.

கரும்பு வெட்டும் எந்திரம்

இந்த நிலையில் நேற்று கரும்பு வெட்டுவதற்காக அரக்கோணம் வாணியம்பேட்டை பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரது கரும்பு வெட்டும் எந்திரம் மூலம் கரும்பு வெட்டப்பட்டது.

கும்பகோணம் பகுதியை சேர்ந்த டிரைவர் நெல்சன் (32). என்பவர் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது, கரும்பு வெட்டும் எந்திரத்தின் உயரமான முன் பகுதி விவசாய நிலத் தில் செல்லும் மின் ஒயரில் உரசியது.

இதில் மின் கசிவு ஏற் பட்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கரும்பு வெட்டும் எந்திரம் தீ பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதியில் கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சோளிங்கரில் இருந்து தீய ணைப்பு வீரர்கள் வந்தனர். அப்போது அரக்கோணம் தீய ணைப்பு வீரர்களும் வந்தனர். இருவரும் சேர்ந்து தீயை அணைத்தனர்.

இதில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான கரும்பு பயிரும் கருகியது. டிரைவர் நெல்சன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News