உள்ளூர் செய்திகள்
ராணிபேட்டை தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
- புத்தாடை அணிந்து கேக் வழங்கி கொண்டாடினர்
- ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
ராணிபேட்டை:
ராணிபேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இதில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கேக் வழங்கி கொண்டாடினர். கிறிஸ்தவ ஆலயங்களில் ஓலைக்குடிசையில் இயேசு பிறப்பது போன்ற நிகழ்ச்சிகள் சித்தரித்து காட்டப்பட்டன. கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.