உள்ளூர் செய்திகள்
நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்த கார்
- காரில் இருந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி கார் ஒன்று இன்று காலை சென்று கொண்டி ருந்தது. காரை சந்தோஷ என்பவர் ஒட்டி சென்றார்.
அப்போது கடப்பந்தாங்கல் கிராம எல்லைக்குட்பட்ட ஆற்காடு -செய்யாறு சாலையில் வரும்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வழியாக சென்றவர்கள் காரில் இருந்த சந்தோஷை காயமின்றி பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து ஆற்காடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.