வாலாஜாவில் 73 கேமராக்களை பயன்பாட்டிற்கு அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்து ரிமோட் மூலம் தொடங்கிவைத்து பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை.
வாலாஜா நகராட்சி பகுதியில் 73 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு
- இன்று முதல் நடைமுறைக்கு வந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.21லட்சம் மதிப்பீட்டில் 73சிசிடிவி கேமராக்கள் பயன்பா ட்டிற்கு அமைச்சர் ஆர்.காந்தி இன்று தொடங்கிவைத்தார்.நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியில் ரூ.7லட்சம் நகராட்சி நிதியில் ரூ.14லட்சம் என மொத்தம் ரூ.21லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிக்குட்பட்ட பிரதான சாலையான எம்.பி.டி ரோடு, அணைக்கட்டு ரோடு, சோளிங்கர் ரோடு போன்ற சாலைகளில் 73 சிசிடிவி கேராக்கள் பொருத்த ப்பட்டுள்ளதை அமைச்சர் ஆர்.காந்தி நகராட்சி வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி பயன்பாடிற்கு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், வாலாஜா நகரமன்ற துணை தலைவர் கமலராகவன், நகராட்சி ஆணையாளர் குமரி அனந்தன், டி.எஸ்.பி பிரபு, தாசில்தார் நடராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.