உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினா ர். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி மற்றும் மாணவர்கள் உள்ளனர்.

45 ஆயிரம் பழச்செடி, விதைகள், 1,000 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

Published On 2022-11-28 15:18 IST   |   Update On 2022-11-28 15:18:00 IST
  • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
  • ராணிப்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது

ராணிப்பேட்டை:

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராணிப்பேட்டையில் 11,12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் 1,000 பேருக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் 45 ஆயிரம் பழ மரக்கன்று செடிகள், விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி தலைமை தாங்கினார்.மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பேனா, ஸ்கெட்ச், பேட், ரப்பர், பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கல்வி உபகரணங்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கி பேசியதாவது:-

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.உதயநிதி போல் ஒரு எளிமையான மனிதரை பார்க்க முடியாது. கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் கல்வியில் தமிழகம் முக்கியத்துவம் பெற்றது.

முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கு பல்வேறு திட்டங்களை வழங்கினார்.இல்லம் தேடி கல்வி, ஸ்மார்ட் வகுப்புகள், தாய்மார்கள் கஷ்டத்தை அறிந்து அனைவருக்கும் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் சலுகை கொடுத்திருக்கிறார். அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து விட்டு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 திட்டத்தையும் கொண்டு வந்தார்.

பள்ளிகளில் சிறப்பாக படித்து அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு மாடர்ன் பள்ளிகளை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்.அந்த பள்ளியில் அனைத்து வசதிகளுடன் மாணவர்கள் தங்கி படிக்கலாம்.

இந்த அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நான் சமீபத்தில் ஜப்பான் போனேன் அந்த நாடு போல நம் நாட்டை கொண்டு வரும் பொறுப்பு மாணவர்கள் ஆகிய உங்களிடம் இருக்கிறது நீங்கள் நன்றாக படித்து வீட்டையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

இதனை தொடர்ந்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் 45 ஆயிரம் பழச்செடிகள் மற்றும் விதைகள் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.இதில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மரக்கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கினார்.

இந்த பழமரக்கன்றுகள் மற்றும் விதைகள் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வீடுகள் தோறும் வழங்க அந்தந்த நகர செயலாளர்களிடம் அமைச்சர் காந்தி வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஜிகே உலக பள்ளி செயல் இயக்குனர் சந்தோஷ் காந்தி, மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தா, குமுதா, துரைமஸ்தான், மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News