2 கார்களில் கடத்திய 4 டன் போதை பொருட்கள் பறிமுதல்
- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் டோல்கேட் பகுதியில், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக வந்த கார்களை போலீசார் நிறுத்த முயன்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் டிரைவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதை தொடர்ந்து போலீசார் கார்களில் சோதனை செய்தனர். அதில் தலா 2 டன் என மொத்தம் 4 டன் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் குட்கா பொருட்களுடன் கார்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலம், பட்டோலி பகுதியை சேர்ந்த வர்ஷிராம் (25) , பிருசா(22) ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.