உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் கால்வாயில் படையெடுத்த 25 பாம்புகள்
- தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
- பொதுமக்கள் பீதி
சோளிங்கர்:
சோளிங்கர் நகராட்சிக்கு உட் பட்ட 17-வது வார்டு கிழக்கு பஜார் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் உள்ளது.
இதன் அருகே ஒரே இடத்தில் ஏராளமான பாம்பு குட் டிகள் இருந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூடப்பட்டிருந்த கழிவுநீர் கால்வாயை உடைத்து பார்த்தனர். அதில் 25 பாம்பு குட்டிகள் இருந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்து கொண்டு சென்றனர்.
கால்வாயில் பாம்பு குட்டிகள் இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.